இலங்கை – சீனா நாணய பரிமாற்ற ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பு
இலங்கை
இலங்கை மத்திய வங்கிக்கும், சீன மக்கள் வங்கிக்கும் இடையில் 2021 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட இருதரப்பு நாணய பரிமாற்ற ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்பந்தம் வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 10 பில்லியன் சீன யுவான் (சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) நாணய மாற்று வசதி மூலம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிதி ஒத்துழைப்பை தற்போதைய ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியின் சார்பாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
மேலும், சீன மக்கள் வங்கி சார்பில் அதன் ஆளுநர் பென் கோன்ஷெங், அதில் கையெழுத்திட்டுள்ளார்.