ஒற்றுமையில் மிளிர்ந்த பொங்கல் விழா
இலங்கை
க/ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பொங்கல் விழா கலஹா ரன்தரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விழாவில் அதிதிகளாக மத்திய மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.செனரத், கண்டி கல்விவலய கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.S.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் அயல் பாடசாலை அதிபர்கள்,மும்மத போதகர்கள் பிரதேசத்திலுள்ள சிங்கள,முஸ்லிம் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் அணைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மூவின கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.