கனடாவின் இந்தப் பகுதியில் எரிபொருள் விலை அதிகரிப்பு
கனடா
கனடாவின் நோவா ஸ்கோஷியா மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் பகுதிகளில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நோவா ஸ்கோஸியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 3.3 சதங்களினால் அதிகரித்துள்ளது.
ஹாலிபெக்ஸ் பகுதியில் பெற்றோல் ஒரு லீற்றரின் குறைந்தபட்ச விலை 166.2 சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு லீற்றர் டீசலின் விலை 4.1 சதத்தினால் அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு லீற்றர் டீசலின் குறைந்தபட்ச விலை 197 சதங்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரின்ஸ் ஒப் எட்வர்ட் மற்றும் நியூபிரவுன்ஸ்விக் ஆகிய பகுதிகளிலும் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் உயர்வடைந்துள்ளன.