• Welcome to TamilsGuide
செய்திகள் 1

6 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. 

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் விஷால். இவர் நடிப்பில் 13 வருடங்களுக்கு முன் உருவான திரைப்படம் மதகஜராஜா.

இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க, ஜெமினி நிறுவனம் தயாரித்திருந்தனர். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் பல ஆண்டுகள் தள்ளிப்போன நிலையில், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் படக்குழுவினர் இணைந்து கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் 6 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதகஜராஜா திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 34 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
 

Leave a Reply