மத கஜ ராஜா படத்தோட தூணே சந்தானம் தான்.. படத்தோட செகண்ட் ஹீரோ அவர் - விஷால் புகழாரம்
சினிமா
சுந்தர் சி இயக்கத்தில் மத கஜ ராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நித்தின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இன்று படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய விஷால் கூறியதாவது
"இந்த படத்தோட தூண் வந்து என்னோட நண்பன், நடிகர் சந்தானம்- தான் . இந்த படத்தின் செகண்ட் ஹீரோவே அவர்தான். சுந்தர் சி-க்கும் சந்தானத்துக்கும் இடையே உள்ள அந்த புரிதல் அபாரமானது. இருவரும் இணைந்து பேசினாலே படத்தின் காமெடி டிராக் ரெடி ஆகிவிடும். பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் பழைய விண்டேஜ் சந்தானத்தை மிகவும் மிஸ் செய்தனர் அதை என் கண்ணால் நான் பார்த்தேன். இப்பொழுது சந்தானம் ஹீரோவாக மாறிவிட்டார். என்னுடைய ஆசை என்னவென்றால் அவ்வப்போது சந்தானம் இரண்டு படங்களில் காமெடியனாக நடிக்க வேண்டும். இல்லையென்றால் சுந்தர் சி இயக்கும் படத்திலாவது நடிக்கவேண்டும்." என்றார்.