• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார் துப்பாக்கிச் சூடு - முழுப்பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும்! -செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

இலங்கை

“மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான முழுப்பொறுப்பையும் மன்னார் பொலிஸார் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் கண்டிக்கத்தக்க வேண்டிய ஒரு விடயம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸாரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள் என்றும் நொச்சிகுளம் கிராமத்தின்  மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தான் தெரியப்படுத்தியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னாரில் தலைத்தூக்கியுள்ள துப்பாக்கிக் கலாசாரம் நொச்சிக்குளம் வாழ் மக்களையே அதிகம் பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணைக்காக கொழும்பில் இருந்து விசேட குழு அடங்கிய பொலிசார் வரவழைக்கப்பட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply