தெல்லிப்பழையில் தேசிய பொங்கல் விழா
இலங்கை
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நாளையதினம் நடைபெறவுள்ள (18) தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளது.
இன்று மதியம் கொழும்பிலிருந்து கடுகதி புகையிரதம் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினரை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுபினர்கள் மற்றும் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளதோடு, கலை நிகழ்வுகளை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.