• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வீட்டைக் கொளுத்திய குற்றச்சாட்டில் சிறுவன் கைது

இலங்கை

கனடாவின் லோக்ஸோர் வீதியில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் 16 வயதான சிறுவன் ஒருவன்  கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வீடொன்றுக்குத்  தீ மூட்டிய குற்றச் சாட்டிலேயே குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தினையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயைக்  கட்டுப்படுத்தியுள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவிபத்தினால் குறித்த வீடு கடுமையாகச்  சேதமடைந்துள்ளதாகவும், நாயொன்று காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply