• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாலியல் துன்புறுத்தல் - 3 நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

இலங்கை

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பல கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவின் பரிந்துரையின் பேரில் குறித்த மூன்று ஊழியர்களையும் பணி நீக்கம் செய்வதற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார்.
 

Leave a Reply