முன்னாள் அமைச்சரின் சகோதருக்கு பிணை
இலங்கை
முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப் பிணையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் சகோதரர், நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்காக 2024 டிசம்பர் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் கம்பஹா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான திசர இரோஷன நாணயக்கார, பின்லாந்தில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்து 30 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.