ஒன்றாறியோ மாகாணத்தில் புதிதாக அணு மின் உற்பத்தி நிலையம்
கனடா
ஒன்றாறியோ மாகாணத்தில் புதிதாக அணு மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணம் தனது அணு சக்தி கொள்ளவினை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக புதிய அணு மின் உற்பத்தி நிலையம் ஒன்று உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
சக்தி வள அமைச்சர் ஸ்டீபன் லீஸ் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். ஹோப் துறைமுகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வெஸ்ட் பெலி பகுதியில் புதிதாக அணு மின் உற்பத்தி நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அணு மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 2050ம் ஆண்டளவில் 75 வீதமான மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சக்திவளத்துறையில் அணுமின் உற்பத்தி நிலையங்கள் முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளன.
இதன் காரணமாக அதிக அளவு அணுமின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் கனடா மீது அழுத்தங்களை பிரயோகித்து வரும் பின்னணியில் அணுமின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஒன்றாரியோ திட்டமிட்டுள்ளது.
ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் ஏற்கனவே அமெரிக்காவிற்கு மின்சாரத்தை விநியோகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.