கனடிய முன்னாள் நிதி அமைச்சரின் தீர்மானம்
கனடா
கனடாவின் முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்டியாவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன.
தாம் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சர்ச்சைக்குரிய கார்பன் வரி அறிவீட்டு திட்டத்தை ரத்து செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தாம் பொறுப்பினை எற்றுக்கொண்டால் கடுமையான தீர்மானங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண அரசாங்கங்களும் மத்திய அரசாங்கமும் இணைந்து செயல்படுத்தக்கூடிய கார்பன் வரி திட்டத்தை அமல்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது கார்பன் வரியை அவர் சாதகமானது என குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தற்பொழுது கார்பன் வரி விதிப்பு நுகர்வோரை பாதிக்காத வகையில் வடிவமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் லிபரல் கட்சியின் தலைமை பதவி தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது