• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேள்பாரி படம் குறித்து இயக்குனர் ஷங்கர் கொடுத்த சூப்பர் அப்டேட்... 

சினிமா

இயக்குனர் ஷங்கர், பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை வியக்க வைத்தவர்.

இவர் கடைசியாக தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற அரசியல் சார்த்த கதைக்களத்தை மையமாக கொண்டு படத்தை இயக்கியிருந்தார். பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வரவேற்பை தான் பெற்றுள்ளது.

நாளுக்கு நாள் படத்தின் வசூல் குறைந்துகொண்டே வருகிறது.

தற்போது இயக்குனர் ஷங்கர் தான் இயக்க இருக்கும் வேள்பாரி படம் குறித்து கூறியுள்ளார். வீரயுக நாயகன் வேள்பாரியின் படத்தை 3 பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எழுதியுள்ள வேள்பாரி புத்தகத்தை படமாக்க முடிவு செய்துள்ள ஷங்கர் இதற்கான கதையை எழுதி முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply