லாஸ்லியா நடித்த Mr.HouseKeeping ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா
ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலின் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரி பாஸ்கர். அடுத்ததாக மிஸ்டர் ஹவுஸ் கீபிங் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஹரி பாஸ்கருக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தில் ஹரி பாஸ்கர் , வீட்டில் ஐடி-யில் வேலை செய்கிறேன் என வீட்டிற்கு தெரியாமல் சென்னையில் வந்து லாஸ்லியா வீட்டில் வீட்டு பணி செய்யும் நபராகவுள்ளார். லாஸ்லியாவிடம் காதல் கொள்கிறார் ஆனால் லாஸ்லியா பல நபர்களை டேட் செய்து வருகிறார் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.