என்னை வளர்த்த ஊருக்கு என்னால் இயன்றது- லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு நிவாரண நிதி வழங்கிய டென்னிஸ் வீரர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத்தீ எரித்துள்ளது.
வெஸ்ட் ஹில்ஸ் பகுதியிலும் பரவிய காட்டுத்தீ சில மணிநேரங்களுக்குள் 900 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை தீக்கிரையாக்கியது. இதற்கிடையே, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கனடா தீயணைப்பு வீரர்களும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் காட்டுத்தீக்கு இரையான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் நிவாரண பணிகளுக்காக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வென்ற ரூ.71 லட்சம் பணத்தை வழங்கவுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் ப்ரிட்ஸ் தெரிவித்துள்ளார். என்னை வளர்த்த ஊருக்கு என்னால் இயன்றதை செய்வதாகவும், மக்களுக்கு உதவ பலர் முன் வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.