ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அனைவரின் இதயத்தையும் வென்று விட்டோம்.. அருண் விஜய் நெகிழ்ச்சி
சினிமா
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'வணங்கான்' திரைப்படத்தின் வெற்றியையடுத்து இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு மிக்க நன்றி. ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அனைவரின் இதயத்தையும் வென்று விட்டோம். எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான். எனக்குள் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். இதற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















