• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிஸ் வாகன கொள்வனவுக்கு இலங்கைக்கு இந்தியா மானியம்

இலங்கை

மானியத்தின் கீழ் இலங்கை பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வாகனங்களை இந்தியா வழங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் புதன்கிழமை (15) தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி DWRB செனவிரத்ன ஆகியோர் இலங்கை ரூபா 300 மில்லியன் பெறுமதியான மானிய உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு குறைந்தபட்சம் 80 ஒற்றை கெப் ரக வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் துணைப்பொருட்களை வழங்குவது, குடிமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது தொடர்பான இலங்கை காவல்துறையின் முக்கிய தேவையை இந்த திட்டம் நிவர்த்தி செய்யும்.

இலங்கை மக்களின் தேவைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்தியாவின் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி ஒத்துழைப்பு முயற்சிகள், வீடமைப்பு போன்ற துறைகளில் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்வில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

சுகாதாரம், கல்வி, மீன்பிடி, போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாழ்வாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் என உயர்ஸ்தானிகராலய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply