• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தடுப்பூசிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை! -வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிப்பு

இலங்கை

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போதும்  அங்குள்ள தடுப்பூசிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் குளிரூட்டியில் வைக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே சுகாதார வைத்திய அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சுமார் இரண்டு மணி நேரம் மாத்திரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. எம்மிடம் உள்ள குளிரூட்டிகள் 24 மணித்தியாலம் மின்சாரம் தடைபட்டாலும் கூட பாதுகாக்க கூடிய வசதி கொண்டவையாக காணப்படுகின்றது. எனவே இங்குள்ள தடுப்பூசிகள் எந்த விதத்திலும் பழுதடைவதற்கு சந்தர்ப்பமில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் எவ்வித ஐயமும் இன்றி குறித்த தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்து.
 

Leave a Reply