• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு

இலங்கை

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி மலைமகள் வீதியிலுள்ள வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சடலமாக மீட்கப்பட்டவர்  ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் என  அடையாளம் காணப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply