• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வால்மார்ட் நிறுவனத்தின் புதிய லோகோவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவின் பின்புற நிறத்தை மட்டும் அடர் நீல நிறத்தில் மாற்றி அதனை புதிய லோகோ என்று சமூக வலைத்தளங்களில் அறிமுகம் செய்துள்ளது.

இதனையடுத்து சமூக வலைதள நெட்டிசன்கள் அதன் புதிய லோகோவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவையே பட்டி டிங்கரிங் செய்து புதிய லோகோவாக வெளியிட்டுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

17 வருடங்களுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply