150% வருமான அதிகரிப்பை பதிவு செய்த தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம்
இலங்கை
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 150% வருமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் 23 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 1.42 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
ஆண்டின் இறுதிக்குள் வருமானம் 2 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
பின்னவல யானைகள் சாரணாலயம் மொத்த வருமானத்தில் மிகப்பெரிய பங்களிப்பை (876 மில்லியன் ரூபா) வழங்கியது.
இது 61.4% சதவீத பங்களிப்பாகும்.
மேலும், தெஹிவளை விலங்கியல் பூங்கா 22%, ரிதியகம சபாரி பூங்கா 9% மற்றும் பின்னவல திறந்த மிருகக்காட்சிசாலை 7.5% மொத்த வருமானத்தில் பங்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.