• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்மாந்துறையில் சிறைச்சாலை பேருந்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்

இலங்கை

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரெருவர்  நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளை பேருந்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவமொன்று நேற்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே  இவ்வாறு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு  அழைத்து  வரப்பட்ட வேளை தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்  தப்பிச் சென்ற நபரை  பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply