கட்சி சேர புகழ் சாய் அபயங்கர் இசையில் ஜோடி சேரும் பிரதீப் - மமிதா பைஜூ படம் பூஜையுடன் தொடக்கம்
சினிமா
கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'டிராகன்' படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து அடுத்த படமும் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பிரேமலு படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை மமிதா பைஜூ பிரதீபுக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளார்.
இறுதிச் சுற்று, சூரரை போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய சுதா கொங்ராவிடம் உதவி இயக்குனராக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த படத்தை இயக்க உள்ளார்.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கட்சி சேர உள்ளிட்ட பாடல்கள் மூலம் பிரபலமடைந்த சாய் அபயங்கர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியதில் உருவாகும் சூர்யா 45 படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.