• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல ஹிந்தி தொடர் CRIME PATROL நடிகையின் 14 வயது மகன் மர்ம மரணம் - நண்பர்கள் கைது

சினிமா

ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சியான கிரைம் பேட்ரோல் -இல் நடித்து நடித்து மக்களுக்கு பரீட்சயமான நடிகை சப்னா சிங். இவருக்கு14 வயதில் சாகர் கங்வார் என்ற மகன் இருந்த நிலையில் தற்போது அவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசம் பரேலியில் தனது தாய் மாமா ஓம் பிரகாஷுடன் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு படித்துவரும் சாகர், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இசத்நகர் பகுதியில் உள்ள அடலாக்கியா கிராமத்திற்கு அருகே அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தனது மகனின் மரணத்துக்கு கேட்டு நடிகை சப்னா சிங் உறவினர்களுடன் பரேலி காவல் நிலையத்தின் முன் நேற்று வரை போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசாரின் வாக்குறுதியை போராட்டத்தை நிறுத்த உடன்பட்டார்.

இந்நிலையில் இன்று [புதன்கிழமை], சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் கைது செய்தனர். அனுஜும் சன்னியும் சாகருடன் போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதாக விசாரணையின்போது ஒப்புக்கொண்டனர்.

அளவுக்கு அதிகமாக அருந்தியதால் சாகர் மயங்கி விழுந்தான் என்றும் பீதியடைந்த அவர்கள் அவனது உடலை வயல்வெளிக்கு இழுத்துச் சென்றுவிட்டனர் என்றும் வாக்குமூலம் அழித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
 

Leave a Reply