130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
இலங்கை
கஹதுடுவ பகுதியில் 05 கிலோ ஹெரோயின், 1.6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 800 எக்ஸ்டஸி மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது சுமார் 130 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொரளை, வனத்தமுல்ல பிரதேசத்தில் 02 கிலோ 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லேரிய பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.