• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்

இலங்கை

சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது.

அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சபாநாயகர் அசோக ரன்வல நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது.

அவர் சபாநாயகரான பின்னரும், இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரன்வல என்று பதிவு செய்யப்பட்டது.

எனினும், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனால், அவரது கலாநிதி பட்டம் குறித்து விவாதம் உருவானது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக சபாநாயகர் அசோக ரன்வல குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply