• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிறுவன உதவியை நிராகரித்த அதானி போர்ட்ஸ்

இலங்கை

இலங்கை துறைமுகத் திட்டத்திற்கு நிதியளிக்க தனது சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாகவும், அமெரிக்க நிதியுதவியைப் பெறப் போவதில்லை என்றும் அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) நிறுவனம் செவ்வாயன்று (10) அறிவித்துள்ளது.

அதேநேரம், இலங்கையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் (CWIT) திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம் என்று அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டமானது நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படும்.

யுஎஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (DFC) யிடமிருந்து நிதியுதவிக்கான எங்கள் கோரிக்கையை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம் என்றும் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியது.

கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் DFC நிறுவனம், இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் CWIT இன் அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் இயக்கத்திற்கு உதவியாக 553 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டது.

அதானி போர்ட்ஸ், இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இத் திட்டம் 2021 செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

இது இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கொள்கலன் முனையமாக இருக்கும் என்பதுடன் 1,400 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் ஆழம் கொண்டதாக அமையும்.

கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகமாகும், மேலும் இது 2021 முதல் 90 சதவீதத்திற்கும் அதிகமான சுறுசுறுப்பான பயன்பாட்டில் இயங்கி வருகிறது.

புதிய முனையம் வங்காள விரிகுடாவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை பூர்த்தி செய்யும், முக்கிய கப்பல் வழித்தடங்களில் கப்பல்கள் இலங்கையின் பிரதான துறைமுகத்தை பயன்படுத்தி கொள்ளும்.

இந்த புதிய முனையத்தின் ஆண்டு பொருட்கள் கையாளும் திறன் 3.2 மில்லியன் டொலரை தாண்ட வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply