ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது
இலங்கை
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் ஏ-9 பிரதான வீதியில் ஓமந்தை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சாரதிகள் வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் வீதிகளின் ஊடாக யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.