கனடாவில் 70000 டொலர் பெறுமதியான போலி டிக்கட்களை விற்பனை செய்த பெண்
கனடா
கனடாவில் சுமார் 70000 டொலர் பெறுமதியான போலி இசை நிகழ்ச்சி டிக்கட்களை பெண் ஒருவர் விற்பனை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு முகநூல் வழியாக போலி டிக்கட்டுகளை விற்பனை செய்துள்ளார்.
பிரபல பொப்பிசைப் பாடகி டெய்லர் ஷிப்ட் இசை நிகழ்ச்சி டிக்கட்டுகள் என்ற போர்வையில் போலி டிக்கட்டுகளை குறித்த பெண் விற்பனை செய்துள்ளார்.
குறித்த பெண் சுமார் 28 பேரை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக இவ்வாறு போலி டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசடியுடன் தொடர்புடைய பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.