ஒன்றாரியோவில் அதிகம் களைவாடப்பட்ட வாகனங்கள்
கனடா
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த ஆண்டில் அதிகம் களவாடப்பட்ட வாகனங்கள் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களின் பிரகாரம் 2022 லெக்சஸ் ஆர்எக்ஸ் (2022 Lexus RX) என்ற வாகனமே அதிக அளவில் களவாடப்பட்டுள்ளது.
கனடா முழுவதிலும் அதிக அளவில் களவாடப்பட்ட வாகனமாக 2022 டொயோட்டா ஹைலேண்ட் வாகனம் பட்டியலிடப்பட்ட பட்டுள்ளது.
ஒன்றாறியோ மாகாணத்தை பொறுத்தவரையில் இந்த வாகனம் இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.
ஹைலேண்டர் வாகனம் சர்வதேச அளவில் நல்ல கிராக்கி உள்ள வாகனம் என்பதனால், அந்த வாகனத்தை அதிக அளவு களவாடுவதற்கு கொள்ளையர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத வாகன விற்பனையின் மூலம் தங்களுக்கு கிடைக்கக்கூடிய லாபத்தை அதிகரித்துக்கொள்ள கொள்ளையர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 20 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒன்றாறியோ மாகாணத்தில் வாகன கொள்ளை சம்பவங்கள் 48.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது.