முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது
இலங்கை
தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியின் போது பொலிஸாருடன் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பதுளை பொலிஸில் ஆஜராகியிருந்த ஹரின் பெர்னாண்டோ காலை கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்