• Welcome to TamilsGuide
செய்திகள் 1

த்ரிபோஷ நிறுவனத்தை மூடும் தீர்மானமில்லை – அரசாங்கம்

இலங்கை

நாடு முழுவதிலும் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குனராகவுள்ள ஸ்ரீலங்கா த்ரிபோஷ லிமிடெட் (SLTL) என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய ஆதாரமாகச் செயல்படும் நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியதை அடுத்து நிதி அமைச்சு இந்த விடயத்தை ஒரு அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் தொடரும் என்றும் நிதி அமைச்சு அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

திரிபோஷா தற்போது சுமார் 664,920 தாய்மார்கள் மற்றும் 925,172 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உதவிகளை வழங்குகிறது.

ஒவ்வொரு மாதமும் சுமார் 1.6 மில்லியன் பொதிகளை விநியோகம் செய்கிறது.

இந்தத் திட்டம் முதன்மையாக ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் பாலூட்டும் தாய்மார்களை இலக்காகக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply