• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றில் உள்ள 225 ஆசனங்களை புதுப்பிப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்- திலகரட்ன டில்ஷான்

இலங்கை

”நாடாளுமன்றில் உள்ள 225 ஆசனங்களை புதுப்பிப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்” என  ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

பாணந்தறை பகுதியில்  நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியலில் மக்கள் மாற்றத்தினையே எதிர்ப்பார்த்துள்ளனர் அதனாலேயே நாடாளுமன்றில் உள்ள 225 ஆசனங்களை புதுப்பிப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றனர். நாடு தொடர்பில் சிந்தித்து நாட்டிற்காக வேலை செய்யக் கூடியவர்களையே மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் தங்களின் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மீண்டும் நாடாளுமன்றுக்கு வருவதற்கு பலர் எதிர்ப்பார்த்துள்னர்.இதுமிகவும் கவலைக்குரிய விடயமாகும் மக்கள் மத்தியில் இனவாதத்தினை விதைத்து சுயலாப அரசியல் நோக்கம் கருதி பலர் வலம்வருகின்றனர் ஆனால் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது” இவ்வாறு திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply