ஜனாதிபதியின் உருவத்துடன் போலி நாணயத்தாள் - ஒருவர் கைது
இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் ஒன்றை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று (04) பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாணயத் தாள்களை அச்சடித்ததாக அண்மையில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த கைது வந்துள்ளது.
எவ்வாறெனினும், அரசாங்கமும் மத்திய வங்கியும் புதிய நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது.