• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொன்னம்பலவானேஸ்வரரை தரிசித்த ரஞ்சன் ராமநாயக்க

இலங்கை

திருடர்களை அரசாங்கம் பாதுகாக்க முற்படுமானால், அதனை சுட்டிக்காட்ட பலமான எதிர்க்கட்சியாக தாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கொச்சிக்கடை, ஸ்ரீ பொன்னம்பலனானேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் ஆலயத்திற்கு வருகைத் தந்த இவருக்கு, மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்போது, கோயிலுக்கு வருகைத் தந்திருந்த பக்தர்களுடன், அவர் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதன்போது ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பேச்சாளரான ரவி குமுதேஷ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று கம்பஹா பேருந்து நிலையம் அருகில் இடம்பெற்றிருந்தது.

கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் 50 இற்கும் மேற்பட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன.

ஆனால், இவற்றில் எந்தவொரு கட்சிக்கும் எதிர்ப்பு மனுக்களை எவரும் சமர்ப்பிக்கவில்லை.எனினும், அனைவரும் எம்மை பார்த்து அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்காக எம்மை பார்த்து இவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.நான் இருந்த கட்சிகளின் சட்டத்தரணிகள், தங்கள் வேலையையும் விட்டுவிட்டு, இன்று எமது கட்சி தொடர்பாக தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்படி இருந்தும் இவர்கள் செல்லும் இடமெல்லாம் தோல்வி மட்டும்தான் கிடைக்கிறது. இன்று எனது பாதை தெளிவாகியுள்ளது. நான் மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற, செயற்பாட்டு அரசியலுக்கு வரப்போகிறேன்.அன்றிலிருந்து இன்றுவரை நான் மக்களுக்காக மட்டும்தான் செயற்படுகிறேன்.

இந்த நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்ற ஐவர் அரசியலில் இருந்தே ஓய்வுப் பெற்றுள்ளார்கள்.

இவர்கள் அரசியலில் இருந்து விலகிவிட்டார்கள் என்ற காரணத்திற்காக, இவர்கள் தப்பித்துவிட முடியாது.

இவர்கள் திருடிய பணத்தை மீள பெற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இந்த காரியத்தை செய்யாவிட்டால், அதனை சுட்டிக்காட்ட நாம் நாடாளுமன்றில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply