• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வீடு கொள்வனவு செய்பவருக்கு மகிழ்ச்சி செய்தி

கனடா

கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வீடுகளின் விலை குறைவு மற்றும் அடகு கடன் வட்டி விகித மாற்றம் போன்ற நிலைமைகள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.

ரேட்ஹப்.சீஏ (Ratehub.ca) என்ற இணைய தளம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான இயலுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச வருமான அளவு சராசரி தொகை குறைவடைந்துள்ளது.

12 நகரங்களில் இவ்வாறு வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கனடாவில் விலை உயர்ந்த வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நகரங்களான ரொறன்ரோ, விக்டோரியா, வாங்கூவார் போன்ற பகுதிகளிலும் இந்த மாற்றத்தை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான இயலுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 

Leave a Reply