• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் உயர்வு

இலங்கை

2024 ஆம் ஆண்டின்  இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும்,  முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில்   ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே இதற்குக் காரணம் எனவும்  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விவசாயம் 1.7 சதவீதமும், தொழில்துறை 10.9 சதவீதமும், சேவைத்துறை 2.5 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மானியங்களைக் குறைத்ததன் பின்னர் வரிகள் 2.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் தேயிலை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிலவும் பாதகமான வறட்சியான காலநிலையே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், கடந்த ஏழு மாதங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது.
 

Leave a Reply