• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டன் ஒக்ஸ்போர்ட் வீதியில் போக்குவரத்துக்குத் தடை

லண்டனின் ஒக்ஸ்போர்ட் வீதியின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நகர மேயர் சாதிக் கான் (Sadiq Khan) அறிவித்துள்ளார்.

இந்த ஒக்ஸ்போர்ட் வீதி (oxford street) உலகின் பரபரப்பான வர்த்தகப் பகுதிகளில் ஒன்றாகும்.

மேலும் குறித்த ஒக்ஸ்போர்ட் வீதியைத் தினமும் சுமார் அரை மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இத்திட்டத்திற்கு சுமார் 150 மில்லியன் பவுண்ட்ஸ் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply