• Welcome to TamilsGuide
செய்திகள் 1

19.6 மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

இலங்கை

போலி தங்க ஆபரணங்களைப்  பயன்படுத்தி 19,6 மில்லியன் ரூபாய்  நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தங்க நகைகளை அடகு வைக்கும் பிரிவில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரிடம் இருந்து 41 போலி தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த நிதி நிறுவனத்தில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் போது அவர்  போலியான ஆவணங்களை அவர்களுக்கு வழங்கி வந்துள்ளார் எனவும், அத்துடன் குறித்த தங்க ஆபரணங்களுக்கு சமமான போலி ஆபரணங்களை இணையம் மூலம் இறக்குமதி செய்து அதனை குறிப்பிட்ட ஆபரணங்களின் பைகளில் இட்டு உண்மையான நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply