• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லயன் குடியிருப்பொன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு

இலங்கை

யட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ விபத்தில் 55 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், தீ விபத்தினால் 5 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், வீடுகளிலிருந்த பொருட்களும் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

மேலும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், யட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply