மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள்
இலங்கை
விடுதலைப் போரில் மரணித்த முதலாவது, மாவீரனான சத்தியநாதனின் நினைவு நாளான நவம்பர் 27ஆம் திகதி, மாவீரர்களுக்கான நினைவுகூறும் பொதுநாளக 1989 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
நவம்பர் மாதம் 25ஆம் திகதி தொக்கம் மாவீரர்களை நினைவுகூரும் வாரம் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டு 27ஆம் திகதி நிறைவடைகின்றது.
வடக்கு, கிழக்கில் இம்முறை நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் மாலை 6.05மணிக்கு நினைவொலி எழுப்பபட்டு, 6.06மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து 6.07 இற்கு ஈகை சுடர் ஏற்றப்படவுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்திலும் விசேட அஞ்சலிகள் இடம்பெறவுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





















