அமெரிக்காவில் தாமதமான 6 ஆயிரம் விமானங்கள் - பெரும் அவதிப்பட்ட பயணிகள்
அமெரிக்காவில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகள் ஆகியவை பலத்த புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டன.
இதனால் அங்கு விமான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், 6 ஆயிரத்து 387 விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மியாமி விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகியது. இது மேலும் தாமதத்துக்குக் காரணமாக அமைந்தது.





















