• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் பொருட்கள் விலை அதிகரிக்க காரணம் என்ன! அரசாங்கம் விளக்கம்

இலங்கை

இலங்கையில் அண்மைக்காலமாக பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதற்கான காரணம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. வர்த்தக விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

புறக்கோட்டை இறக்குமதியாளர் சங்க பிரதிநிதிகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பொருட்களை விநியோகம் செய்வதிலும் அவற்றின் விலைகள் தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்தியாவில் நிலவி வரும் எல்நினோ வானிலை காரணமாக பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராயப்பட திட்டமிடப்பட்டது.

இந்தியாவில் அதிக மழை மற்றும் எல்நினோ காரணமாக மிளகாயின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் கூறியதாக அவர் மேலும் சுட்டிக்காட்டி உள்ளார் கொள்கலன்கள் தொடர்பில் பின்பற்றப்படும் சில நடைமுறைகள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் மிளகாய் வகைகள் சந்தைக்கு விநியோகம் செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அவற்றின் ஈரப்பதத்தின் அளவின் அடிப்படையிலேயே சந்தைக்கு கொள்கலன்களை விடுவிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். எல்நினோ நிலமைகளினால் சில பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் அந்தப் பொருட்களை வேறு இடங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் பொருட்களை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இறக்குமதியாளர்கள் உறுதிமொழி வழங்கியதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply