• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை

வீட்டு உபயோக மற்றும் வர்த்தக நுகர்வோருக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் கட்டங்களாக மீண்டும் தொடங்கப்படும் என்று லாஃப்ஸ் (LAUGFS)எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு 3,000 மெட்ரிக் டொன்களுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் வந்தடைந்ததை தொடர்ந்து, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை படிப்படியாக மீண்டும் தொடங்குவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, வீட்டு உபயோக மற்றும் வர்த்தக நுகர்வோர் இருவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, விநியோகம் பல கட்டங்களாக மீண்டும் தொடங்கப்படும் என்று LAUGFS எரிவாயு நிறுவனம் கூறியுள்ளது.
 

Leave a Reply