லெஹங்காவில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீலீலா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நடிகை ஸ்ரீலீலா இந்திய அளவில் அனைவருக்கும் தெரிந்த பிரபலங்களில் ஒருவர். இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால், அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.
அடுத்ததாக கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து தனது முதல் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்திய சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உள்ளது. மேலும், தனுஷுடன் முதல் முறையாக கைகோர்த்துள்ள ஸ்ரீலீலா ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி ரஜினியின் தர்மன் படத்தில் சமீபத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு புகைப்படங்கள் கூட வெளியாகி இணையத்தில் வைரலானது.
மிகவும் பிஸியான நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா அவ்வப்போது தனது ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். அந்த வகையில், தற்போது லெஹங்கா ஆடையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஸ்ரீலீலா ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:























