பிரேசில் அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மீண்டும் தேர்தல்
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் நடக்கும் இந்த அதிபர் தேர்தலில் நான்காவது முறையாகப் போட்டியிடும் 80 வயதான தற்போதைய அதிபர் லூலாவுக்கோ, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகனான பிளாவியோ போல்சனாரோ இடையே முதல்கட்ட வாக்குப்பதிவில் பெரும்பான்மை இல்லாமல் போனது.
அறிக்கைகளின்படி, போல்சனாரோ 56 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும், லூலா 53.7 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
எனவே வரும் அக்டோபர் 25 அன்று 2 ஆம் கட்ட தேர்தலில் அவர்கள் மீண்டும் மோதுகின்றனர்.
இதில் பிளாவியோ போல்சனாரோ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவு பெற்றவர் ஆவார். ஏற்கனவே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
போல்சனாரோ வெற்றி பெற்றால், லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரிக்கும். லூலா வெற்றி பெற்றால், பிரேசில் வாஷிங்டனிடமிருந்து விலகி, சீனாவுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தும் என கருதப்படுகிறது.
அடுத்த ஜனாதிபதி பதவிக்காலம் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும்.






















