• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தியாக தீபத்தின் சிலை அகற்றம் - நல்லூரில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

இலங்கை

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் நல்லூரில் தொடர் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம் நேற்று முன்தினம் (30) மாலை 5மணி முதல் ஆரம்பமாகி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறித்த போராட்டம் இன்று மாலை ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவகத்திற்கு பேரணியாக சென்று மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் நிறைவடைய இருக்கின்றது.

அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை நல்லூரில் தியாக தீபத்தின் நினைவிடத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் இன்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச் சிலையை கடந்த 27ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் காவல்துறையினர் அகற்றிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply