• Welcome to TamilsGuide
செய்திகள் 1

4 பிரதேசங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

இலங்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (05) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், இதன்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  
 

Leave a Reply