• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

இலங்கை

பயணிகளுக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் உள்ளனவா என்பதையும், பேருந்துகளின் தரத்தையும் பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று கொழும்பு, பஸ்டியன் மாவத்தையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பேருந்துகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு அவை தொடர்பில் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதிக்குள் பேருந்துகளில் காணப்படும் குறைபாடுகளை சரிசெய்து, வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வந்து வருமான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகளின் புகை வெளியேற்றம் தொடர்பான பரிசோதனையும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு பேருந்துகள் பொருத்தமான நிலையில் உள்ளனவா என்பது தொடர்பான பரிசோதனையும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
 

Leave a Reply