இலங்கையில் சரித்திரம் படைத்த மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன்
இலங்கை
சரித்திரம் படைத்த மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் திரைப்படம் இலங்கையில் இதுவரை இல்லாத அளவு 17 திரை அரங்குகளில் வெளியானபோது வந்த பத்திரிகை விளம்பரம் .
நாடோடி மன்னன்’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவு களை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய் தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.
கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.
திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.
சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.
Sukumar Shan





















